பெயர்களின் சொல்லிக்கணம்[தொகு]

பெயர்களின் சொல்லிக்கணம்[தொகு]

bookmark

இயேசு என்னும் சொல் Iesus என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான Ἰησοῦς (Iēsoûs) என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங்களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் יְהוֹשֻׁעַ (Yĕhōšuă', Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழியில் יֵשׁוּעַ (Yēšûă') எனவும் அமைந்ததாகும். கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார் என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள்.

கிறித்து (கிறிஸ்து) என்னும் சொல் திருப்பொழிவு பெற்றவர் (அபிடேகம் செய்யப்பட்டவர்) என்னும் பொருளுடையது. அதன் மூலம் Χριστός (Christós) என்னும் கிரேக்கச் சொல். அது எபிரேய மொழியில் மெசியா מָשִׁיחַ (Messiah) என்று வழங்கப்படும் சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.

எபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும் போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப் பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் கிறிஸ்து (மெசியா, திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் கிறிஸ்தவர் (கிறித்தவர்) என அறியப்பெறுகின்றனர் (திருத்தூதர் பணிகள் 11:26).